துதி பாடல்
அருவமாகவும், பன்னிருஎழுத்தின், மூலாதாரசக்தியாகநின்ற ஆதிஅன்னையே !!
ஆதவனும், பிறைசந்திரனும், நாகாபரணமும், மகுடத்தில்சூடிய உலகஅன்னையே !!
இயற்கை சக்தியான வசீகரமுகமும், யவ்வனம்நிறைந்த பொன்னிறமேனி அன்னையே !!
ஈர்ப்பு உருவதோற்றமும் அழகியதிரிசூலம் நிறுத்திய உலகஅன்னையே !!
உமாலட்சுமிவாணி ஒருநிலையில், முக்குணசக்தியாக சாந்தம்தரும் அன்னையே !!
ஊக்கம் தரும் மனோலயமும், சர்வமங்களமும் புன்னகையுடன் அருளும் உலக அன்னையே !!
எட்டு கரங்களில், அருள்தரும் ஆயுதங்கள் ஏந்தி நலம்காக்கும் அன்னையே !!
ஏகானந்த நிலையில் தாமரைபீடத்தின் மீது அமர்ந்திருக்கும் உலக அன்னையே !!
ஐந்து நிலைசக்தி கோபுரமாக உயர்ந்துநின்று காட்சிதரும் உலக அன்னையே !!
ஒளிஒலி அருவமும், உருவமும் கலந்துஜீவிக்கும் மூலபிரம்மசக்தி அன்னையே !!
ஓம்கார நிலையில் சர்வ சிருஷ்டியும், முக்தியும் அருள்தரும் உலக அன்னையே !!
ஒளடதம் என்னும் சர்வரோகநிவாரணமூலிகை அமிர்தமாகஜெயம்தரும் அன்னையே !!
ஃஎன்னும் முக்காலத்தையும் உணர்த்தும் பரபிரம்மசக்தி உலக அன்னையே !!
உன் பாதம் சரணம்! சரணம்!! சரணம்!!! தாயே!




